நீதிமன்றம் – Sri Lankan Tamil News

யாழ் 5ஜி விவகாரம் தொடர்பில் முக்கிய திருப்பம்!

யாழ். மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழில்நுட்பம் கொண்டுவரப்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 ஜி ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல்... Read more »

இருவருக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்றம்!

கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கபட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். காரைநகர் – பாலாவோடை பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதியன்று, 55 வயதான குடும்பத்தலைவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த... Read more »

Advertisement

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

நீராவியடி ஆலயத்திற்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட... Read more »

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

திருகோணமலையில் புத்திக்கூர்மை குறைந்த தனது மகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம்.ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய... Read more »

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரி சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இந் நிலையில், அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுப்பதற்கான ஆரம்ப விசாரணையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற... Read more »

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு

திருகோணமலையில் மனவளர்ச்சிக் குன்றிய சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் இன்றையதினம் தீர்ப்பளித்துள்ளார். திருகோணமலை, நிலாவெளி இலும்பைக் குளம் பகுதியில் இருந்து சிறுவர் இல்லத்தில் வளர்த்து வந்த 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட... Read more »

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 22ம் திகதிவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் அனுமதியளித்துள்ளார். சந்தேகநபரின் உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன்,... Read more »

நிதி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி! யாழ்.நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபாய் முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான அந்த நிறுவன உத்தியோகத்தர் சுமார் 3 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்! இலங்கையில் முடியப் போகும் வாழ்க்கை

நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்தே குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், கட்டுநாயக்க விமான... Read more »

கல்முனைகுடியில் சிக்கிய பெண்களிற்கு விளக்கமறியல் நீடிப்பு

கேரளா கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டது இதன் போது கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா... Read more »