நாடாளுமன்றம் – Sri Lankan Tamil News

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியத்தை இழக்கப்போகும் 21 தமிழ் பேசும் உறுப்பினர்கள் யார் தெரியுமா?

19 ஆம் திருத்தத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பயண்படுத்தி திட்டமிட்டபடி இன்று இரவு நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற முடியாத நிலை ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. இதில் 21 தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ள பாராளுமன்றம் – தேர்தல் செலவு 550கோடி ரூபாய்

அடுத்த ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தனக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் பொது தேர்தலை நடத்துவதற்கு சுமார்... Read more »

Advertisement

பொதுத்தேர்தலில் அதிகளவிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொருத்தமான மேலும் பல பெண்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண்கள் கோரியுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் கொள்கை தீர்மானம் எடுப்பதற்காக இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்தில் இது தொடர்பில்... Read more »

கோட்டாபயவின் தீர்மானத்திற்கு மங்கள எதிர்ப்பு!

ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்ப்பினைப் பதிவுசெய்தார். நாடு இன்று அழிவை நோக்கிப் பயணிப்பதாகவும், இதனிடையே சர்வதேவ... Read more »

பொறுப்புக்கூறாமல் தப்பிக்கவே முடியாது! நாடாளுமன்றில் அரசை எச்சரித்த சரவணபவன் எம்.பி.

இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கும் முயற்சிகள் இலங்கையை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் நிலைக்கே இட்டுச்செல்லும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே... Read more »

நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான திகதி பெப்ரவரி 18இல் அறிவிக்கப்படும்

நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நள்ளிரவில் கலைக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி ஜனாதிபதிக்கு இதற்கான அதிகாரம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நாடாளுமன்றத்தை கலைக்க இரண்டு நல்ல நேரங்கள்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மார்ச் மாத ஆரம்பத்தில் இரண்டு நல்ல நேரங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் 10 ஆம் திகதி இரண்டு தினங்களில் ஒன்றில் நாடாளுமன்றத்தை கலைக்க இந்த நல்ல நேரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதம் 3 ஆம் திகதி... Read more »

அடுத்த மாதம் கலைக்கப்படும் நாடாளுமன்றம்! ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல்?

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு தான் எதிர்கட்சிக்கு யோசனை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில்... Read more »

வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்திற்கு 5000 முக மூடிகள்

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சம்பந்தமாக எப்படி செயற்பட... Read more »

விரைவில் அறிவிக்கப்படவுள்ள நாடாளுமன்ற, பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள்

பொது நிறுவகங்களுக்கான நாடாளுமன்ற குழு (கோப்) மற்றும் பொதுக்கணக்கு குழு (கோபா) ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும்போது இந்த பெயர்கள் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளன. இந்த பெயர்கள் தொடர்பான பரிந்துரைகள் ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைத்துள்ளன. இந்த... Read more »