July 8, 2019 – Sri Lankan Tamil News

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதன் முடிவாக சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு தொடர்ந்தும்... Read more »

நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் 5லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன்!

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் சுமையுடனேயே இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளா் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளாா். இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000... Read more »

Advertisement

யாழ்.வடமராட்சி பகுதியில் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் நடந்த திகில் சம்பவம்

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.... Read more »

கொழும்பில் முழுமை அடைந்த தெற்காசியாவின் அதிசயம்!

தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோபுரத்தின் நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்ப்பட்டு வருவதாக செயற்திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்தார். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான... Read more »

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! நவீனமயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இது விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை... Read more »

இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை

நாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச்... Read more »

இலங்கையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்! பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு

களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை மேற்கொள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை அடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை... Read more »

விடுதைலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள... Read more »

இலங்கை சிங்களவர்களின் நாடு! தமிழர்கள் கோபிக்கக் கூடாது

இலங்கை சிங்களவர்களின் நாடு, தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம்... Read more »

யாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை

யாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக... Read more »