July 16, 2019 – Sri Lankan Tamil News

இலங்கை வாழ் பயணிகளுக்கு அடித்தது அதிஷ்டம்

சீனாவின் ரோலிங்-ஸ்டாக் தயாரிப்பாளரான சி.ஆர்.ஆர்.சி கிங்டாவோ சிஃபாங் கோ லிமிடெட் நிறுவனம் இலங்கைக்கு ஒன்பது டீசல் ரயில்களை தயாரித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் 90 ரயில் கார்கள் பொருத்தப்பட்ட புதிய வகை டீசல் ரயில்களின் உற்பத்தி முடிவடைந்துள்ளன. இந்த நிறுவனம்... Read more »

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள உறுதிமொழி

இலங்கை பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான... Read more »

Advertisement

ராஜபக்சக்களை பெண்களே அதிகம் நேசிக்கின்றனர்

ராஜபக்சக்களை பெண்களே அதிகளவில் நேசிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா, கட்டானை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாடு தற்பொழுது அடைந்துள்ள... Read more »

இலங்கை உட்பட பல நாடுகளில் 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபத்து

25 மில்லியன் Android தொலைபேசிகளுக்கு புதிய Malware அல்லது தீங்கிழைக்கும் தன்மை தாக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக புதிய கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த Malware ஆபத்து சீன இணைய நிறுவனத்திடம் உள்ள Android கட்டமைப்பிற்கான “9Apps” என்ற பெயரில் 25 மில்லியன் Android கையடக்க தொலைபேசிகளுக்கு... Read more »

இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறி வரும் நோய் – இதுவரை நால்வர் உயிரிழப்பு

Meningio cocoal Meningities என்ற மூளைக்காய்ச்சலில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யுமாறு கொழும்பு நகர அவசர வைத்திய பரிசோதகர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு... Read more »

இலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்! மிரண்டு போன பொலிஸார்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச்சத்தில் வைத்திருந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக கலவான, வெலிகும்புர மற்றும் அழுத்வத்தை... Read more »

மீள பதவியேற்கும் முஸ்லிம் அமைச்சர்கள்! பின்னணியில்….

நாடாளுமன்ற தெரிவுக்குழு எங்களை அழைத்தபோது அங்கு சென்று தெளிவான பதிலை வழங்கியிருக்கின்றேன். அந்த அடிப்படையிலேயே நாங்கள் தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம்! பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்

முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாய்நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமாயின் கிரமமான அரசியல் திட்டமொன்று... Read more »

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமான பயணிகளுக்கு மகிழ்சியான செய்தி

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி இதனை தெரிவித்துள்ளார் மெல்பேர்ன் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்கைக்கு விரைவில் விமானங்களை இயக்கவுள்ளதாக... Read more »

இரு வருடங்களுக்குள் தீர்வு! உறுதி வழங்கிய பிரதமர்

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தெல்லிப்பளை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »