July 17, 2019 – Sri Lankan Tamil News

தமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு

வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் தமிழ் பெண் இராணுவச்சிப்பாய் ஒருவரின் வீடு புகுந்து அவரை வாளால் வெட்டியுள்ளார் பக்கத்து வீட்டுக்காரர். தாக்குதலை தடுக்க சென்ற, பெண் இராணுவத்தின் சகோதரனும் வெட்டிக்காயத்திற்கு இலக்கானார். படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு... Read more »

போதை தலைக்கேறியதால் பெளத்த பிக்குகள் செய்யும் மோசமான காரியம்! அம்பலப்படுத்திய அதிர்ச்சி காணொளியால் சர்ச்சை!

பௌத்த பிக்குமார்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைப் போன்றும், சூதாட்டத்தில் ஈடுபடுவதைப்போலவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற காணொளியின் பின்புலத்தில் பௌத்த மதத்தை அவமதிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ள... Read more »

Advertisement

திருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். தங்க நகர்,கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய... Read more »

திருட்டுத்தனமாக தொலைபேசி பயன்படுத்திய மனைவியை தாக்கிய கணவன்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவனுக்கு தெரியாமல் தொலைபேசி பயன்படுத்திய மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார். கூம்புகார், பாலையூற்று பகுதியைச்சேர்ந்த 21 வயதுடைய... Read more »

46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் பிரஜை! இலங்கையில் முறைப்பாடு

46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவருக்கு எதிராக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான ஒருவர் 80 வயதான நபருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். 46 ஆண்டுகளுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது... Read more »

இலங்கையில் சீனா முன்னெடுக்கவுள்ள மற்றுமொரு திட்டம்!

இலங்கையில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. china petroleum & chemical corporation என்ற சீன நிறுவனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடல் பயணங்களை மேற்கொள்ளும் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம், ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Fuel oil... Read more »

தமிழ் மக்களை ஏமாற்ற ரணில் போட்டுள்ள திட்டம்! மகிந்த வெளிப்படுத்திய தகவல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இதனாலேயே இனப்பிரச்சனைக்கு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர்... Read more »

ரணிலுடன் கூட்டு சேர திட்டம்? மைத்திரியை கைவிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சிலருக்கு மாவட்ட இணைத்தலைமை பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... Read more »

நீரில் மூழ்கிய கிராமங்கள் மீண்டும் தோன்றியது! படையெடுக்கும் மக்கள்

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் பாரிய செயற்திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மூடப்பட்ட கிராமங்கள் மீண்டும் தென்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு 34 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக நீரில் மூழ்கியிருந்த பல கிராமங்கள் மீண்டும் காட்சியளித்துள்ளதனை காண... Read more »

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நோய்! 40 பேர் பலி – 27 ஆயிரம் பேர் வரையில் பாதிப்பு

மழையுடன் கூடிய கால நிலையையடுத்து நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொடர்பில் அலட்சியம்செய்ய வேண்டாம் என்றும் டெங்கு பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியமெனவும் அப்... Read more »