September 8, 2019 – Sri Lankan Tamil News

வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய வன்முறை கும்பல்! யாழில் சம்பவம்

யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்றை சேர்ந்த நால்வர், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாள்களைக் காண்பித்து குறித்த வீட்டிலிருந்தோரை... Read more »

ரணில் குழப்பத்தில் உள்ளார்: கருணா

தேர்தலில் தான் போட்டியிடுவதா அல்லது அமைச்சர் சஜித் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கிறார் என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கிரான், பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் இன்று தமது... Read more »

Advertisement

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 10ம் திருவிழா ( மாலை )

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 10ம் திருவிழா (மாலை) மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

புன்னகை அரசி பட்டத்தை வென்ற இலங்கை வம்சாவளி யுவதி

இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இத்தாலி அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். அழகு ராணி போட்டியில் இத்தாலியை சேர்ந்த கோரோலினா ஸ்டாமரே வெற்றி பெற்றடன் செரினா பெட்ராலி... Read more »

முன்வைத்த காலை பின்னால் எடுக்கேன்! அமைச்சர் சஜித் பிடிவாதம்

குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டேன். அதே போன்று ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை என அமைச்சர் சஜித்... Read more »

சஜித்தின் ஆட்சியில் மைத்திரி பிரதமரா..?

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் எந்த வகையிலும் மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கப்பட மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கம்பெரலிய... Read more »

வரலாற்றில் முதல் முறையாக 4, 286 ஆசிரியர் நியமனங்கள்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே தினத்தில் சுமார் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவை என பிர்தமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக இவர் அல்ல எவர் இறங்கினாலும் படுதோல்வியே! வாசுதேவ அதிரடி

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் அல்ல எவர் கள்மிறங்கினாலும் தேர்தல் பெறுபேறு படுதோல்வியாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு நாடுதழுவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்களை... Read more »

ஆபத்தான நிலையில் தமிழ் தாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றிய இராணுவ சிப்பாய்கள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 (தொ) பொறிமுறை காலாட் படையணியினரால் நேற்று அரசஊர்க்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இருபிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர். அரசபுரக்குளம் வாவியில் நீராடச் சென்றபோது தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கும் சந்தர்ப்பத்தில கூச்சலிட்டனர். அச்சமயத்தில்... Read more »

நெருங்கிய சகாக்கள் இருவரின் பதவியைப் பறித்தார் மகிந்த! ஆட்டம் ஆரம்பம்..

19 வது திருத்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேட்டபோது, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா மீது மஹிந்த ராஜபக்ஷ கோபமடைந்ததாக முன்னர் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இருவர் மீதான அதிர்ப்தி அதிகரித்ததன்... Read more »