October 16, 2019 – Sri Lankan Tamil News

கோத்தபாயவின் தேர்தல் விளம்பரத்தில் இராணுவத்தளபதியின் புகைப்படம்! விளக்கம் கோரும் மஹிந்த தேசப்பிரிய

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விளம்பரம் ஒன்றில் நடப்பு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தமை பிழையான செயல் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இது... Read more »

யாழில் கோத்தபாயவிற்காக பிரச்சாரம் செய்யும் சில புலபெயர் தமிழர்கள்…!

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சாரங்களை மிக மும்மரமாக நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தப்பாயவிற்கும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவிற்கு... Read more »

Advertisement

சுமந்திரனை மீறி தனிமையில் புளொட்டை சந்தித்தார் ரணில்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றிரவு தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார். புளொட் அமைப்பினருடன் சந்திப்பை முடித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கவை, தனது உதயன் பத்திரிகைக்கு வருமாறு ஈ.சரவணபவன் கேட்டுக் கொண்டதற்கமைய, முன்னதாக அங்கு சென்றிருந்தார்.... Read more »

நாளை முதல் ஆரம்பமாகும் யாழ்.விமான நிலையத்தின் சேவைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையானது தற்போது 950 மீற்றர் முதல் 1400 மீற்றர் வரை காணப்படுகின்றது. அது இந்நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி... Read more »

யாழ்.விமான நிலையத்திற்கான வீதியை விட மறுத்தது இராணுவம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், காணிகளை பறிகொடுத்த மக்கள் நாளை அந்த பகுதியில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினமே பொதுமக்கள் அந்த பகுதியை பார்வையிட... Read more »

சாதிக்க துடிக்கும் திருகோணமலையை சேர்ந்த தமிழ் வீராங்கணை!

இலங்கையின் சகல மாகாண மட்டத்தில் ஒன்று சேர்ந்தவர்களை பின்னுக்கு தள்ளி பழுதூக்கல் போட்டியில் திருகோணமலையை சேர்ந்த தமிழ் மாணவியின் மீதான கவனம் அணைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. இன்று 16.10.2019 அகில இலங்கை மட்டத்தில் பொலநறுவையில் நடைபெற்ற பழுதூக்குதல் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட 41 Kg... Read more »

யுத்த வெற்றியை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு

யுத்தம், யுத்த வெற்றி மற்றும் யுத்த வீரச் செயற்பாடுகள் ஆகியவற்றை ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. யுத்த வெற்றியானது, ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய... Read more »

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 22ம் திகதிவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் அனுமதியளித்துள்ளார். சந்தேகநபரின் உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன்,... Read more »

நடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்… கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க?

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக பிரபலங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே லொஸ்லியாவின் நடன பயிற்சி காணொளி அதிகமாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. தற்போது லொஸ்லியா நடன பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இடத்தில் குழந்தைகளுடன் கொஞ்சிய காட்சியும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் காட்சியும்... Read more »

சஜித் பிரேமதாசவின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்! சரத் பொன்சேகா

போதைப்பொருளில் இருந்து இளம் தலைமுறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிட்டம்புவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், போதைப்பொருளில் இருந்து இளம்... Read more »