October 26, 2019 – Sri Lankan Tamil News

கோத்தபாயவுடன் விவாதிக்க சஜித்திற்கு தகுதியில்லை! உதய கம்மன்பில

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் விவாதம் நடத்த, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »

நாட்டின் சட்டம் ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க!

நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) கொழும்பில் வெளியிடப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்... Read more »

Advertisement

சஜித்தை ஆதரிக்கும் மேர்வின் சில்வா

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வா, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மாத்தறை திக்குவளையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேர்வின் சில்வா கலந்துக்கொண்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக... Read more »

சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இன்றி கோத்தபாய வெற்றி பெற முடியாது: துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முழுமையான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இன்றி பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமானது எனவும்... Read more »

கோத்தபாயவுக்கு ஆதரவு கொடுக்கிறாரா சாகல?

அமைச்சர் சாகல ரட்நாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வெளியான தகவலை அமைச்சரின் தரப்பு மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அவர் சஜித் பிரேமதாஸவுக்கே ஆதரவளிப்பதாக அவருடைய தரப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவர்... Read more »

கோத்தபாயவின் நிகழ்வில் சீன தூதுவருக்கு முன்னுரிமை!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நேற்றுக் காலை... Read more »

தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சம்

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் அது தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்பாளர்களும் உள்ளதாக வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற... Read more »

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகவே இது கருதப்படுகிறது! ரவூப் ஹக்கீம்

நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்... Read more »

60 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில்…

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை... Read more »

பூவரச மரத்தில செய்த இடியப்ப உரல் வாங்குங்கோ…! உருத்திரபுரம் வீதியில் இரு சிறுவர்கள்

அங்கிள் பூவரச மரத்தில செய்த இடியப்ப உரல் வாங்குங்கோ என மிகவும் சாமார்த்தியமான முறையில் கரடிப்போக்கு-உருத்திரபுரம் வீதியில் நின்று இரு சிறுவர்கள் இடியப்ப உரல் விற்று வருகின்றனர். பாடசாலை விடுமுறையில் தமது பெற்றோருக்கு உதவும் முகமாக அவர்கள் அங்கு நின்று இடியப்ப உரல்களை விற்றுவருகின்றதாக... Read more »