December 1, 2019 – Sri Lankan Tamil News

ஜனவரியில் மேலும் குறைகிறது வரிகள்!

ஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல்ல குணவர்தன மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரிதிட்டத்தை செயற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

சிறுமியிடம் அத்துமீறல்: இலங்கையைச் சேர்ந்த பிரவீன்குமார் கைது

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாவட்டம், திருவாதவூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமைச்... Read more »

Advertisement

தனிமையில் சஜித்! மீண்டும் ராஜாவாகும் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறார்.... Read more »

கோட்டபாயவின் வெற்றிக்கு ரணிலே காரணம்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது இருந்து வெறுப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீதான வெறுப்பின் காரணமாகவே பொது மக்கள், பொதுஜன பெரமுனவை... Read more »

சிங்கள மக்கள் கொந்தளித்தால் மீண்டும் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ முடியாது

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 13ஆவது சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் மோடி, கோட்டாபயவிடம் கூறியதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மலையக... Read more »

எம்மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை: ஜனாதிபதி

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் கட்டாயமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோட்டபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 29ஆம் திகதி இந்தியா சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில்... Read more »

வ‌ட‌க்கு, கிழ‌க்கில் மாவீர‌ர்தின‌ம் கொண்டாட‌ப்ப‌ட்ட‌மை மூலம் ஜனாதிபதி, பிரதமரால் நிரூபிக்கப்பட்டுள்ள விடயம்

அர‌சாங்க‌த்தின் எத்த‌கைய‌ இடையூறும் இன்றி வ‌ட‌க்கு, கிழ‌க்கில் மாவீர‌ர்தின‌ம் கொண்டாட‌ப்ப‌ட்ட‌மை ஜனாதிப‌தி கோட்டாப‌ய‌ ம‌ற்றும் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் ஆட்சி இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சி என ச‌ர்வ‌தேச‌த்துக்கு நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்... Read more »

சர்வதேச சமூகத்தின் மிரட்டல்களுக்கு ராஜபக்ச அரசு அடி பணியாது ! – தினேஷ் குணவர்தன

வெளிநாடுகளினதோ அல்லது சர்வதேச அமைப்புகளினதோ அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் ராஜபக்ச அரசு ஒருபோதும் அடிபணியாது என்று வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு... Read more »

வடக்கு ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன்??

6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் வட மாகாண ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வடக்கு... Read more »

மோடியின் ஆலோசனைக்கு கட்டுப்படும் கோட்டாபய தரப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், 13ஆம் திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த... Read more »