December 5, 2019 – Sri Lankan Tamil News

வெளிநாடு ஒன்றிற்கு செல்ல முற்பட்ட நிலையில் சிக்கிய 15 பேர்

மடக்களப்பு மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் இருந்து வந்து, கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்து செல்ல முயற்சித்த 15 பேரை கடற்படையினர் கைது செய்து, நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வான் ஒன்றில்... Read more »

அரசியலில் இருந்து விலகுவதாக தீர்மானிக்கவில்லை! மங்கள

அரசியலில் இருந்து விலகத் தீர்மானிக்கவில்லை எனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெலிகமை பிரதேசத்தில் உள்ள மெரியட் ஹொட்டலில் நடைபெற்ற சந்திப்பொன்றில் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

Advertisement

தமிழர்களை ஒரு தரப்பாக்க முனையும் வெளிவிவகாரக் கொள்கை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ- பசுபிக் புவிசார், பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது. சுவிசில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நேரடி அமர்வின்... Read more »

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை ஏற்கின்றேன்: சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் செய்யப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சஜித் எதிர்க்கட்சித் தலைவர் என்பது தொடர்பில் எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்... Read more »

மைத்திரியின் சகோதரரது சம்பளத்தை பாரியளவில் குறைத்த ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேனவின் சம்பளத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாரியளவில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளார். குமாரசிங்க சிறிசேன, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் பதவி... Read more »

சம்பந்தனிடம் அமெரிக்கத் தூதுவர் வழங்கிய வாக்குறுதி!

இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய... Read more »

கட்சியிலிருந்து என்னை நீக்குமாறு ரணிலிடம் சிலர் கோரியுள்ளனர்! ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சியில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் சிறிய கட்சி ஒன்றின் சார்பில் தாம் போட்டியிடவுள்ளதாக கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிய கட்சிகள் பலவும் தம்மை போட்டியிட வருமாறு கோரியுள்ளன. சரத் மனமேந்திரா மற்றும் சுசில் கிடெல்பிட்டிய போன்றோர் தம்முடன் இணைந்து... Read more »

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் எழுதிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின்... Read more »

யாழ்.இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கைது!

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (5) அவரை கைது செய்துள்ளனர். 1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி... Read more »

கட்டடதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ள நிறுவனங்கள்!

அரசாங்கம் வற்வரியை குறைத்ததை அடுத்து அதிகரிக்கப்பட்ட சிமெந்தின் விலையை குறைக்கவுள்ளதாக சிமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து அதன் இலாபத்தினை நுகர்வோருக்கு வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்டுகின்றது. அதற்கமைய எதிர்காலத்தில் 75 ரூபாவிற்கும் 85... Read more »