December 6, 2019 – Sri Lankan Tamil News

இலங்கையில் 30 வெளிநாட்டவர்கள் மாயம்?

மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஹான தடுப்பு முகாமில் நேற்றைய தினம் விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.... Read more »

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் உயர்வு – அமைச்சர் டக்ளஸ் நேரில்

கிளிநொச்சியில் தொடர்ந்து அடைமழை பெய்துவருகின்ற நிலையில் இரணைமடுக் குளத்தின் நிலை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சிக்கு இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், குளத்திற்கான நீர் வருகை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன், நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்களுடன் கலந்துரையாடி... Read more »

Advertisement

கிளிநொச்சி வெள்ளத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளத்தில் சிக்குண்ட கார் அடித்துச்... Read more »

வித்தியா கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவார்களா?

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம்... Read more »

ஜனாதிபதி கோட்டாபயவின் தொடரும் அதிரடிகள்! பெரும் மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..

புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை... Read more »

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன்... Read more »

பிரியங்கா கொலை விவகாரம்… மகனை அனுப்பி அழுத்தம் கொடுத்த முதல்வர்! என் கவுண்டரின் முழு பின்னணி

இந்தியாவில் கால்நடை பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் தன் மகனை அழைத்து பொலிசாருக்கு கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27-ஆம் திகதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா... Read more »

பிரியங்காவை கொலை செய்த குற்றவாளிகள் என் கவுண்டர்… மிகவும் மகிழ்ச்சி என நிர்பயாவின் தாய் உருக்கம்

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நான்கு பேரை பொலிசார் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ஹைதரபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை பெண் மருத்துவர் கடந்த... Read more »

நான்கு பேரும் எங்களை நோக்கி சுட்டனர்.. பின்னர்.. என் கவுண்ட்டர் நிமிடங்களை விளக்கிய மூளையாக செயல்பட்ட ஹீரோ

ஹைதராபாத்தில் 4 பேர் என் கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பில் சைராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கமளித்துள்ளார். கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை பொலிசாரால் அவர்கள் சுட்டு... Read more »

காங்கேசன்துறை கடலில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியில் இருந்து காங்கேசன்துறை, தல்செவன கடற்பகுதிக்கு சென்றிருந்த செல்வநாயகம் அலெக்சண்டர் என்ற 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »