January 2020 – Sri Lankan Tamil News

எதிர்க்கட்சி தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனம்! இராஜாங்க அமைச்சர்

அரச அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாமல் போன ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும் என இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக... Read more »

கொரோனா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவலொன்று வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து... Read more »

Advertisement

தமிழ் பெண்ணுக்கு தாயாக மாறிய கிழக்கு ஆளுநரின் நெகிழ்ச்சியான செயல்

நேற்று கொக்கட்டிச்சோலை தாண்தோன்றி ஈஸ்வரர் ஆலய வழிபாட்டிற்காக கிழக்கு மாகாண ஆளுநர் சென்றிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக இடம் பெற்ற தமிழ் பெண்ணின் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திருமணம் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்த போது, திருமண பந்தத்தில் இணையவிருந்த மணப்பெண்ணுக்கு... Read more »

கோரோனா வைரஸை கட்டுப்படுத்த கோட்டாபய அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச மருத்துவ முறைகள் பற்றி அத்துறையிலுள்ள நிபுணர்களை அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் சுகாதார, வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்... Read more »

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை… நீதிமன்றம் திடீர் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், திடீரென்று நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட... Read more »

கொரோனா வைரஸ்: எல்லோரும் சீனாவை விட்டு ஓடும் நிலையில் வுஹானுக்கு திரும்பியுள்ள சுவிட்சர்லாந்துக்காரார்!

உலகின் அத்தனை நாடுகளில் உள்ளவர்களும் சீனாவை விட்டு தலை தெறிக்க சொந்த நாடுகளுக்கு ஓட்டம் பிடிக்கும் நிலையில், ரிஸ்க் எடுத்து தனது குடும்பத்துடன் வுஹானுக்கே சென்றுள்ளார் ஒரு சுவிஸ் குடிமகன். ஜெனீவாவைச் சேர்ந்த Emmanuel Mathias Geebelen (42) வுஹானில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.... Read more »

கொரோனா வைரஸ் பீதி… 83 பிரித்தானியர்கள் சிறப்பு மருத்துவமனையில்: 14 நாட்கள் தீவிர கண்காணிப்பு

தனி விமானம் மூலம் சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 83 பிரித்தானியர்களும் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். சீனாவின் வுஹான் நகரில் இருந்து கிளம்பிய விமானம் நீண்ட 12 மணி நேர... Read more »

தூண்டிலில் சிக்கிய வினோத உயிரினத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்!

மீன் தூண்டிலில் சிக்கிய வினோதமான ஒரு உயிரினத்தை பார்த்து இளைஞர் ஒருவர், அதிர்ச்சியடையும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் Brooklyn பகுதியை சேர்ந்த இளைஞர் சமீபத்தில், தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது குமிழ் வடிவான தலையுடன், பெரிய வாயில் தூண்டில்... Read more »

இறந்த தாத்தாவின் வீட்டை கூகுளில் தேடிய பேத்தி: நாற்காலியில் அமர்ந்திருந்த உருவத்தை பார்த்து அதிர்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன் இறந்த தாத்தாவின் கிராமப்புற வீட்டை தேடிய இளம்பெண், வீட்டிற்கு முன் நாற்காலியில் அவருடைய உருவம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த யஜைரா என்கிற சமூகவலைதளவாசி, சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம்... Read more »

எண்ணெய் டேங்கரில் திடீர் தீ விபத்து: இந்தியர்கள் இருவர் பலி..! பலர் மாயம்

ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த பனமேனியக் கொடியிடப்பட்ட டேங்கரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், இந்தியர்கள் இருவர் பலியானதோடு, பலர் மாயமாகியிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது. புதன்கிழமை மாலை ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரையில் இருந்து 21 மைல் தொலைவில் உள்ள பனமேனியக்... Read more »