January 1, 2020 – Sri Lankan Tamil News

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம், வேறு எவரும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம்... Read more »

24 மணித்தியாலங்களில் 350 ரூபாவாக அதிகரித்த உணவுப்பொதியின் விலை! அமைச்சர் தெரிவிக்கும் விடயம்

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை முதலாம் காலண்டுக்குள் நிறைவுச் செய்து திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் புதுவருட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து... Read more »

Advertisement

புத்தாண்டில் ஜனாதிபதி கோட்டாபய போட்ட தடை!

குறும்தகவல் மூலம் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இன்று புதுவருட கொண்டாடங்கள் இடம்பெற்று வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு குறுந்தகவல் மூலம் ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கவில்லை. கடந்த சில வருடங்களாக ஆங்கில மற்றும் தமிழ்,... Read more »

ராஜபக்‌ச அரசுஏமாற்ற முடியாது – சம்பந்தன் தெரிவிப்பு

“இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்... Read more »

அடுத்த இலக்கில் வெற்றி பெறுவோம்! சஜித் நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலை காட்டிலும் இருமடங்கு பிரச்சாரங்களை பொதுத் தேர்தலில் மேற்கொள்ள தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்க்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “பொதுத்... Read more »

ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறும் இந்திய வங்கிகள்?

இலங்கையில் தம்மால் மேற்கொள்ளப்பட்டுவரும் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக இரு இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன. Axis Bank மற்றும் ICICI Bank Ltd. நிறுவனங்களே தமது வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. இலங்கையில் மேற்கொள்ளும் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, குறித்த வங்கிகளின் தலைமையகங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை,... Read more »

ஸ்ரீலங்காவிலிருந்து இனி தப்பி ஓடமுடியாது! வெளிநாடு செல்பவர்களை கண்காணிக்க முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். தேசிய தரவு மையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு... Read more »

ஸ்ரீலங்கா வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுத்து உல்லாசப்பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச விசாவை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியை பெறும் நோக்கில் அமைச்சரவை அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன... Read more »

போதைப்பொருளுடன் சிக்கிய நபர்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்பாலத்திற்கு அருகில் நேற்றையதினம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் 230... Read more »

தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபயவும் இணைவு!

வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்று முற்பகல் இணைந்துகொண்டுள்ளார். மிரிஹானையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி, நாடளாவிய... Read more »