January 5, 2020 – Sri Lankan Tamil News

அச்சுவேலியில் இரவுவேளை வீட்டுக்குள் புகுந்த ரௌடிகள் அட்டகாசம்!

நேற்றிரவு யாழ் அச்சுவேலி பத்தமேனி உள்ள வீடொன்றிற்குள் புகுந்த காவாலிகள் இனந்தெரியாத நபர்கள் சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச்... Read more »

பத்து வருடங்களாக மகனை தேடியலைந்த 61வது தந்தை மன்னாரில் பரிதாப மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிக்கொண்டு இருந்த 66 ஆவது தந்தை ஒருவர் தனது மகனை பார்க்காமலேயே காலமானார் … மன்னார் மாவட்டத்தில் ஓலைத் தொடுவாய் பகுதியில் வைத்து இலங்கை அரச படையினரால் பலவந்தமாக கடத்தப்பட்ட தனது மகனை பத்து வருடங்களாக தேடிய நிலையில்... Read more »

Advertisement

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் 58 மில்லியன் ரூபா தங்கத்துடன் சிக்கிய முக்கியஸ்தர்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முற்பட்ட போது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 58 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 6.5 கிலோ தங்கத்தை (65... Read more »

எதிர்வரும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள சட்டரீதியான அதிகாரம்

பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். அத்துடன் பாராளுமன்றம்... Read more »

“என்னையும் கைது செய்யுங்கள்” புதிய அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை

அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்குகள் அதிகரிப்பதால், என்னையும் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், வேட்டையாடும் நடவடிக்கையை கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை... Read more »

இலங்கைக்கு எதிராக சுவிஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வழக்கு

பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இலங்கை கிரிக்கெட் அவரது ஒப்பந்தத்தை தவறாக நிறுத்தி, அவரது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாக சண்டிகா ஹதுருசிங்க... Read more »

பொதுத்தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவோம்: தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு பொதுத்தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய... Read more »

தமிழர்களின் அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ள விடயம்

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ள போது, தமிழ் மக்களை தலைமை தாங்கப் போவது சுமந்திரனா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல் எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்... Read more »

நிறைவேற்று அதிகாரத்தை கொள்ளையடிக்கும் பிரதமர் – விமல் வீரவங்ச

19ஆவது அரசியலமைப்பு் திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமர் கொள்ளையிடும் நிலைமை உருவாகி இருப்பதாகவும், இந்த திரிபு நிலைமை தொடர்ந்தும் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்... Read more »

வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலை

பெற்றோர்களின் பங்களிப்பு இன்மையால் வட மாகாணத்தில் பல பாடசாலைகள் மூடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »