February 7, 2020 – Sri Lankan Tamil News

சீன பொருட்களுக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவில் இருந்து வரும் கப்பல் பொருட்களை திருப்பியனுப்பும் செயற்பாடுகளில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் தாம் இறக்குமதி செய்த பொருட்கள் வருகின்ற போதும் அதனை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு இலங்கையின் இறக்குமதியாளர்கள்... Read more »

வடக்கு மாகாணத்தை ஒருவிதமாக நடத்தவேண்டாம்! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வடமாகாணத்தில் அதிகமான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை செய்துவரும் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறு சோதனைச் சாவடிகள் அடுக்கடுக்காக இடப்பட்டுள்ளதால் தமிழ் மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஓரங்கட்டிவருகின்றது என்ற உணர்வே ஏற்பட்டுள்ளது... Read more »

Advertisement

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி? வெளியாகியுள்ள தகவல்

திருகோணமலை மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் நியமனம் இதுவரையில் நடைபெறாத நிலையில் அது தொடர்பான தகவலொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் குறித்த பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருகோணமலை மாவட்ட அரசாங்க... Read more »

இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்து! மரணத்தையும் ஏற்படுத்தலாம்

இலங்கையில் தமது வாழ்நாளில் நான்கு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் பக்கவாத ஆபத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான மருத்துவ கலாநிதி காமினி பத்திரன அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், எனினும்... Read more »

அனுராதபுரத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் யுவதி அனுராதபுரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் ஹிதேகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையாற்றி வரும் ஊழியர் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான... Read more »

இலங்கையில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம்

இலங்கையில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த 16 பேரும் 9 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

இலங்கையில் திருமணமாகி சில மாதங்களில் வெளிநாடு சென்ற கணவன் பரிதாபமாக மரணம்

திருமணமாகி மூன்று மாதங்களில் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அபுதாபி சென்ற நிலையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையிால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த மதுஷான் டி சில்வா... Read more »

ரஞ்சனின் குரல் பதிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமா..?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் கையளித்துள்ள குரல் பதிவுகள் சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டம் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதா இல்லையா என்பது... Read more »

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய முன்னணியின் கீழ் போட்டியிட களமிறங்கும் சரத் பொன்சேகா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்கப்படாது போனால் மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்கவுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், நான் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு... Read more »

ரோசியை மட்டும் செயற்குழுவில் மீண்டும் இணைத்து கொள்ள விரும்பும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு பேரில் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை மாத்திரம் மீண்டும் செயற்குழு உறுப்பினராக நியமிக்க அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். ரோசி சேனாநாயக்க உட்பட நீக்கப்பட்ட நான்கு பேரை மீண்டும்... Read more »