February 11, 2020 – Sri Lankan Tamil News

அமைச்சர் ஒருவரது பொறுப்புக்களை அவசரமாக மாற்றிய கோட்டாபய!

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயின் அமைச்சுக்களின் பொறுப்புகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் மின்சக்தி அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அழுத்கமகே, நேற்று மாலை புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பாக இதற்கான பதவிப்பிரமாணத்தை அவர் செய்து கொண்டுள்ளார். இதன்படி... Read more »

இலங்கைக்காக 48.2 மில்லியன் டொலர்கள் கோரியுள்ள டொனால்ட் ட்ரம்ப்!

இலங்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2021 பாதீட்டின் ஊடாக 48.2மில்லியன் டொலர்களை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். இதில் 39.2 மில்லியன் டொலர்கள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிதியாக கோரப்பட்டுள்ளன. 8.38 மில்லியன் டொலர்கள் பயங்கரவாத தடுப்பு மற்றும்... Read more »

Advertisement

100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் – ரிஷாட்

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில... Read more »

அந்தரங்கப் படங்களை முகநூலில் பதிவேற்றுவேன்…யாழில் சிறுமியை மிரட்டிய நபர்!

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அதனை புகைப்படம் எடுத்து முகப்பு த்தகத்தில் பதிவிடுவேன் என அச்சுறுத்திவந்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாா் கைது செய்துள்ளனர். வலி,தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி குறித்தஇளைஞர் துஷ்பிரயோகத்துக்கு... Read more »

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வட மகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும்... Read more »

மத்தள விமான நிலையத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.... Read more »

இன்னும் மூன்று நாட்களுக்கே மட்டுமே நாடாளுமன்றம்- சபாநாயகர் தெரிவிப்பு

இன்னும் மூன்று நாட்களுக்கே நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று காலை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்து ஆசிபெறச் சென்றார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இத்தகவலை... Read more »

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த... Read more »

விடுவிக்கப்பட்ட காணிகளை ஒரு மாத காலத்துக்குள் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், இன்று பிரதேச செயலாளர்களுடனான விசேட... Read more »

இலங்கையில் திடீர் விசேட சுற்றிவளைப்பு: சிக்கிய 8 வெளிநாட்டு பெண்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். பம்பலபிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை இவ்வாறு கைது செய்ததாகவும், இதன்போது இந்த... Read more »