February 13, 2020 – Sri Lankan Tamil News

தபால் ஊழியரின் அசிங்கமான செயல் : களங்கமடைந்துள்ள தபால் திணைக்களம்

தபால் ஊழியரின் அசிங்கமான செயற்பாட்டை அடுத்து அவர் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது கடிதங்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து அவற்றுடன் கூடவே போதைப்பொருளையும் விநியோகம் செய்து வந்துள்ளார். கொழும்பு பொரளை தபால் நிலையத்தில் தபால் விநியோகிப்பவராக செயற்பட்ட குறித்த நபர் தபால்களை... Read more »

ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்!

இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதிகரித்து... Read more »

Advertisement

யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது., “காதலையும்... Read more »

பிரதமர் மகிந்த உத்தரவு – இது மட்டுமே பயன்படுத்த தீர்மானம் !

அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து வீட்டுத் திட்டங்களுக்கும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஓடுகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் 14,022 வீடுகள் கட்டப்படவுள்ளதாக வீட்டுவசதி அபிவிருத்தி ஆணைக்குழுவின் தலைவர் ரேணுகா துஷ்யந்த இன்று தெரிவித்தார். உள்ளூர் ஓட்டு... Read more »

சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம்- நீதிமன்றம் விடுத்த உத்தரவு

13 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலராக பெண் உத்தியோகத்தர், அவரது சகோதரி ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க, நிக்கரவெட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 26ம் திகதி மீள அவர்களை மன்றில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்றம்... Read more »

தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணாக செயற்படும் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது விக்னேஸ்வரனும், அவரது சகாக்களும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தமிழர்களுக்கு... Read more »

சின்னம் தொடர்பான பிரச்சினை தீர்க்க 10 பேர் கொண்ட குழு! ரணில் – சஜித் இணக்கம்

புதிய கூட்டணியின் சின்னம் உட்பட பிரச்சினை தீர்ப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணங்கியுள்ளனர். கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற விசேட சந்திப்பில் புதிய கூட்டணி சம்பந்தமாக விரிவாக... Read more »

தீவகப்பகுதியின் வளர்ச்சியில் பா. உ சிறீதரன் பெரும்பங்காற்றுகிறார்: யாழ்.மறை மாவட்ட ஆயர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக தீவகப் பகுதியின் வளர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தன் இயலுமைக்குட்பட்ட வகையில் நிறைந்தளவான பங்களிப்பை ஆற்றிவருவதாக யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அல்லைப்பிட்டி பிலிப் நேரியார் தேவாலயத்தில் நாடாளுமன்ற... Read more »

நாமல் எம்.பியை போன்று தந்தைக்காக களமிறங்க தயாராகும் மைத்திரியின் மகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தரணி சிறிசேன நேற்று புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். சட்டத்தரணியாக அவர் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு... Read more »

கல்வி தகுதி உட்பட ஏனைய தகுதிகள் கொண்டவர்களுக்கே வேட்புமனு: பொதுஜன பெரமுன

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை வழங்கும் போது மக்கள் ஆதரவு மற்றும் பிரபலம் என்பவற்றை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது அவர்களின் கல்வி தகுதி உட்பட ஏனைய தகுதிகளை கவனத்தில் கொண்டு வேட்புமனுக்களை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு... Read more »