February 14, 2020 – Sri Lankan Tamil News

கூட்டமைப்பை நாசமாக்கிய கட்சி, ஒற்றுமையின் பெயரால் கோசம் எழுப்புகின்றது!

தமிழ் அரசியல் கட்சியினுடைய, கொள்கைகளை நாங்கள் முன்வைத்து, அவர்களுடைய கூடாரத்தை காலி செய்ய எத்தனிக்கின்றோம் என விசனமாக கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். கூடாரம் மிக விரைவில் காலியாகி விடும் என்பது எமக்கு நன்றாக தெரியும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.... Read more »

இது வரலாற்றில் முதல் தடவையாக நடக்கும் விடயம்! பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு

உள்ளூர் பரீட்சைகளின்போது நிரலாக்கப்படாத (non-programmable) கணிப்புப்பொறிகளை (calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி இலங்கை கணக்கியல் சேவை தரம் மூன்று பரீட்சையின் நிதிக்கணக்கியல் ஒன்று வினாத்தாள் மற்றும் இரண்டு வினாத்தாள் ஆகியவற்றுக்கே கணிப்புப்பொறிகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

Advertisement

சட்ட முரண்பாடுகளில் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது என தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், தற்போது சட்டமா அதிபருக்கும் பொலிஸ் பதில் அதிபருக்கும் இடையில் இடம்பெறும் சட்டமுரண்பாடுகளில் தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய தொலைபேசி... Read more »

ஒவ்வொருவருக்கும் தலா 25 இலட்சம் ரூபா நிதி வழங்கும் ரணில்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் சமகால நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 25 இலட்சம் ரூபா பணம் வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்... Read more »

சிறைச்சாலை கைதிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அவர்களின தண்டனைக் காலம் நிறைவடைந்து விடுதலையானதும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக எவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள அலுவலர்

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைக்காக வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள அலுவலர் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியன் பென்னிஸ்டார் கடந்த வருட இறுதியில் கடத்தப்பட்டு விசாரணை செய்யயப்பட்டதாக முறையிடப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அந்த... Read more »

ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

பத்து ஆண்டுகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தொட்டுவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்னவென்ற மக்களின் கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. மக்கள் அரங்கம் என்ற பெயரில் சந்திப்புக்களை நடாத்தி வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சமீபத்தில்... Read more »

சின்னம் தொடர்பான தீர்வு தொடர்பில் சஜித் தலைமையில் மற்றுமொரு சந்திப்பு!

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் எழுந்துள்ள சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையில் இன்று மற்றுமொரு சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள்,ஆகியோரை பிரதி தலைவரும் ஐக்கிய தேசிய சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார். நாடாளுமன்றக்குழுவை... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ராஜபக்ஷர்களுக்கு நெருக்கமான உறவினர் கைது

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ஆட்சியின் போது மிக் ரக விமான கொள்வனவு சர்ச்சையில் உதயங்க வீரதுங்க சிக்கியிருந்தார். இந்நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவரை குற்றப் புலனாய்வுத்... Read more »

காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் நடக்கும் மோசமான செயற்பாடுகள்! பெற்றோர் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பாடசாலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த கடைகள் திக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு... Read more »