February 16, 2020 – Sri Lankan Tamil News

இலங்கை பெண்ணை நாடு கடத்த வேண்டாம் என சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு

இலங்கை பெண்ணொருவர் நாடு கடத்தப்படுவதற்கு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அவரின் இந்திய பிரஜாவுரிமைக்கான விண்ணப்பம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. எனவே தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அந்த... Read more »

கருணாவிற்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன்

கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும்... Read more »

Advertisement

கீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள்! புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன?

பிரித்தானியாவின் “கீனி மீனி” என அழைக்கப்பட்ட கே.எம்.எஸ் என்ற தனியார் இராணுவ நிறுவனம் பற்றிய ஒரு நூல் அண்மையில் லண்டனில் வெளியாகியிருக்கின்றது. Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes என்ற இந்த நூலை, Phill Miller... Read more »

ஜனாதிபதி கோட்டாயவுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க வாய்ப்பு

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடுவதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களை கைச்சாதிட வைக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தொடர்ந்தால் ஜனாதிபதி... Read more »

அமெரிக்கா விடுத்துள்ள தடைக்கு எதிராக அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பு!

போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த நம்பிக்கையான ஆதரங்களுக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளமைக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள்... Read more »

மாவையை வெளியேற்ற சுமந்திரன் வைக்கும் ‘செக்’…யார் தெரியுமா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது அவர் களமிறங்க... Read more »

இணையம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

இணையம் பயன்படுத்தும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணையத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடக பயனர்களுக்கு,இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாக... Read more »

பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து ஆராய களமிறங்கும் விசேட விசாரணைக் குழு!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான 7 பேர் கொண்ட அந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைக் கேட்டறியும் அமர்வுகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வெளிநாடொன்றில் கைதான இலங்கை இளைஞன்! எதற்கு தெரியுமா?

மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இலங்கையர் மேலும் இருவருடன் இணைந்து வேறொரு நபரின் கடனட்டை மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர். அந்நாட்டின் இப்பாரகீ மாநிலத்தில்... Read more »

யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் ரீதியான ராக்கிங் கொடுமையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வளாகத்தின் புதுமுக மாணவிகளுக்கு அலைபேசி ஊடாக பாலியல்துன்புறுத்தல் விடுத்ததாக... Read more »