February 17, 2020 – Sri Lankan Tamil News

யானை அல்லது அன்னம் சின்னத்தை சஜித்திற்கு வழங்கினால் ஐ.தே.கவிற்கு பாரிய சிக்கல்

யானை சின்னத்தை ஐக்கிய தேசியக்கட்சி கட்சி ஒன்றுக்கு வழங்கினால் தேர்தலின் பின்னர் மீண்டும் அந்த சின்னத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு உறுதிப்பாடு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலின் பின்னர் குறித்த சின்னம் கட்சியுடன் பதிவுசெய்யப்படும் என்பதால் இந்த உறுதியை தமக்கு வழங்கமுடியாது என்று... Read more »

புதிய கூட்டணியின் தலைவர் மகிந்த – தவிசாளர் மைத்திரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் எதிரில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »

Advertisement

சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் குமார வெல்கம?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர், சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதன்மையாக... Read more »

அரசாங்கம் எம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – ஹிருணிகா

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா நாட்டுக்குள் வர தடைவிதித்துள்ள நிலைமையில், தற்போதைய அரசாங்கம் முன்னர் கூறியது போல், அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர... Read more »

ஜெனிவா செல்லும் அனந்தி சசிதரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள உள்ளார். காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் சம்பந்தமான... Read more »

தேசிய பட்டியலில் வருவது எனக்கு அவமரியாதை – மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது! மைத்திரி

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வர தான் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தேசிய பட்டியல் மூலம்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி பாடம் கற்க வேண்டும்! ஹிருனிக்கா

ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் செய்தமையை போன்று தற்போதும் நடந்துக்கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெறவிருந்தபோதும் அது நாளை 18ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே... Read more »

இலங்கை படையினர் மீது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டு

2009ஆம் ஆண்டு போரின்போது காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் அவர்களுக்காக போராடும் நடவடிக்கையாளர்களுக்கும் 2019இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கையின் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப்பிரிவினரும் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்... Read more »

நாடு முழுவதும் 40,000 போலி மருத்துவர்கள்

நாடு முழுவதும் தம்மை மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக தெரியவந்துள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போலி மருத்துவர்களில் 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்... Read more »

தடை மாத்திரம் போதாது போர் குற்றம் பற்றி விசாரிக்க வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரம் போதுமானது அல்ல எனவும் போர் குற்றம், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் வடக்கு மாகாண... Read more »