பேஸ்புக் விருந்தில் அரைநிர்வாண நிலையில் கைது செய்யப்பட்ட இளம் யுவதிகள்! – Sri Lankan Tamil News

பேஸ்புக் விருந்தில் அரைநிர்வாண நிலையில் கைது செய்யப்பட்ட இளம் யுவதிகள்!

இந்த செய்தியைப் பகிர்க

பலங்கொடை – பெலிஹுல் பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்தில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இளைஞர், யுவதிகள் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுடன் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 Pregabalin மாத்திரைகள், 3 அப்பிள் மாத்திரைகள், 160 மில்லிகிராம் ஹெரோயின், 300 மில்லிகிராம் கொக்கேன், 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 150 கிராம் கஞ்சா என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

விருந்தில் கலந்து கொண்ட பெரும்பாலான இளம் யுவதிகள் அரைநிர்வாண கோலத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply