வாகனத்தையும் வீட்டையும் எடுத்துச் சென்ற சம்பந்தன்! மகிந்த புலம்பல்.. – Sri Lankan Tamil News

வாகனத்தையும் வீட்டையும் எடுத்துச் சென்ற சம்பந்தன்! மகிந்த புலம்பல்..

இந்த செய்தியைப் பகிர்க

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply