இலங்கை வைத்தியசாலையில் நடந்த அதிசய நிகழ்வு! – Sri Lankan Tamil News

இலங்கை வைத்தியசாலையில் நடந்த அதிசய நிகழ்வு!

இந்த செய்தியைப் பகிர்க

அண்மையில் அனுராதபுரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அதிசய நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

26 வார குழந்தைக்கு சமமான அளவில் இந்த கட்டி காணப்பட்டுள்ளது. எனினும் வயிற்றினை வெட்டாமல் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் வைத்தியர் குழுவினர் இணைந்து இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

3D எனும் அதிக தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கட்டி மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வைத்திய குழுவினால் 33 சத்திரசிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவே மிகப்பெரிய கட்டி என தெரிவிக்கப்படுகின்றது. இதன் நிறை 1100 கிராம் ஆகும்.

42 வயதான பெண்ணிற்கே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயிற்றில் மில்லி மீற்றர் அளவில் 4 இடங்களில் சிறிதாக வெட்டி இந்த கட்டி நீக்கப்பட்டுள்ளது.

அதிக தொழில்நுட்ப திறன் கொண்ட உபகரணங்கள் இந்த சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இந்த கட்டி நீக்கப்பட்டுள்ளது.

வயிற்றை வெட்டி இந்த கட்டி அகற்றப்பட்டிருந்தால் அவர் 90 நாட்கள் ஓய்வில் இருந்திருக்க நேரிட்டிருக்கும். அத்துடன் சில பகுதிகளில் வயிற்றுக்குள் தங்கிவிடும். எனினும் தற்போது அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறித் பெண்மணி ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply