யாழ்.நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை – Sri Lankan Tamil News

யாழ்.நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

இந்த செய்தியைப் பகிர்க

யாழ்.நகாில் பெருமாள் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டிலிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளது.

வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ள நிலையில், பிள்ளைகளும் பாடசாலை சென்றுள்ளனர்.

வீட்டில் யாருமற்ற இவ்வேளை உள்ளே புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி அங்கிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் கடைத்தொகுதிகள் காணப்படுவதுடன் , தனியார் கல்வி நிறுவனங்களும் காணப்படுவதோடு, பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply