இந்து ஆலயங்களில் மிருகபலி- அடுத்த வாரம் மேன்முறையீட்டு தீர்ப்பு ! – Sri Lankan Tamil News

இந்து ஆலயங்களில் மிருகபலி- அடுத்த வாரம் மேன்முறையீட்டு தீர்ப்பு !

இந்த செய்தியைப் பகிர்க

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

நீதிமனறின் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோதும், ஜூலை 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply