46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் பிரஜை! இலங்கையில் முறைப்பாடு – Sri Lankan Tamil News

46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் பிரஜை! இலங்கையில் முறைப்பாடு

இந்த செய்தியைப் பகிர்க

46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவருக்கு எதிராக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

56 வயதான ஒருவர் 80 வயதான நபருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது இரு நண்பர்களையும், சுவிட்சர்லாந்தில் பிரஜை ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குடியுரிமை உள்ள சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள 56 வயதான நபரும் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், கடந்த வருடம் இலங்கைக்கு வந்துள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதாகவும், அதனால் தான் மன உளச்சலுக்குள்ளாவதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நீர்க்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply