படிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரன் – Sri Lankan Tamil News

படிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரன்

இந்த செய்தியைப் பகிர்க

தஞ்சை: வீட்டில் பெற்றவர்கள் ஆசை மகளை ஹாஸ்டலில் தங்க வைத்து, டாக்டருக்கு படிக்க வைத்தால், இந்த பெண் வேறு ஒருத்தனை நம்பி வீடு எடுத்து குடும்பமே நடத்தி வந்துள்ளார்… லிவிங் டூ கெதர்.. கடைசியில் நம்பி போன காதலன் மாணவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு விட்டான்!

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் இந்துமதி. 20 வயசாகிறது. ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அதனால் கால் நடை மருத்துவ மாணவிகள் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.

அப்போது, இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆனது. இந்துமதியை ஃபேஸ்புக்கில் பார்த்ததுமே, அவரை கவிழ்க்க டிசைன் டிசைனாக டிரஸ், ஹேர்ஸ்டைல் என முயற்சி செய்துள்ளார் சதீஷ்குமார்.

லிவிங் டூ கெதர்
போதாக்குறைக்கு தான் ஒரு என்ஜினியர் என்று பெண்ணை நம்ப வைத்துள்ளார். இவர்களின் அறிமுகம் நட்பாக மாறி.. நட்பு காதலாக மாறி.. காதல் வீடு எடுத்து இவர்களை தங்க வைக்கும் லிவிங் டூ கெதர் அளவுக்கு முன்னேறிவிட்டது. ஒரு கட்டத்தில் அதாவது போன வருடம் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். ஹாஸ்டலில் இருப்பதாக பெற்றோரை நம்பவைத்து, இந்துமதி தனி குடித்தன வீட்டிலிருந்தே தினமும் காலேஜ்-க்கு போய் வந்துள்ளார்.

விபரீதம்
பெற்றவர்களை ஏமாற்றி வந்த, இந்துமதிக்கு நாளுக்கு நாள் விபரீதம் தெரிய ஆரம்பித்தது. நம்பி வந்தது ஒரு என்ஜினியர் இல்லை, எலக்ட்ரீசியன் என்று. அந்த வேலைக்கும் போகாமல் குடிச்சிட்டு எப்பவுமே போதையில் விழுந்து கிடந்திருக்கிறார். இதில் சண்டையும் அடிக்கடி இவர்களுக்கு வந்திருக்கிறது.

தற்கொலை
போன ஞாயிற்றுக்கிழமையும் வழக்கமான சண்டை வந்துள்ளது. இதனால் விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு விஷயத்தை சொல்ல, விரைந்து வந்து போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.

விசாரணை
இந்துமதி சடலமாக, தூக்கில் தொங்க, பக்கத்திலேயே போதையில் தூங்கி கொண்டிருந்தார் சதீஷ்குமார். அவரை எழுப்பி விசாரித்தபோதுதான் எல்லா விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. தகவல் தெரிந்து பதறி அடித்து கொண்டு வந்த பெற்றோரோ, மகளை அடித்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சதீஷ்குமாரை குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைதான் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

Recommended For You

About the Author: sudarseithy

Leave a Reply