மின்னஞ்சல் ஊடாக புகைப்படம் பிடிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை – Sri Lankan Tamil News

மின்னஞ்சல் ஊடாக புகைப்படம் பிடிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

இந்த செய்தியைப் பகிர்க

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியாவில் மின்னஞ்சல் ஊடாக புகைப்படம் பிடிப்பவர்களின் விபரங்கள் புகைப்பட நிலையங்களினால் தவறாக பிரசுரிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டைக்கு புகைப்படம் பிடிப்பவர்களின் விபரங்கள் மின்னஞ்சல் படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

அப்படிவத்தில் புகைப்பட நிலையத்திலுள்ளவர்கள் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை சில நேரங்களில் தவறாக பதிவேற்றம் செய்வதால் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்திற்கும் குறித்த மின்னஞ்சல் ஊடாக புகைப்படத்திற்கு வழங்கப்படும் விண்ணப்பங்களிலும் உள்ள விபரங்கள் சரிவரப் பொருந்துவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பெயர் அல்லது அடையாள அட்டை இலக்கத்தில் சில தவறுகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அவற்றை சரி செய்து கொள்வதற்கு பொதுமக்கள் பல தடவைகள் குறித்த புகைப்பட நிலையங்களுக்குச் சென்று அதனைச்சரி செய்வதற்கு பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் வீண் அலைச்சல், நேரம் மற்றும் பணம் அலைச்சல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புகைப்பட நிலையங்களிலுள்ளவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள செல்பவரின் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை சரிவர பெற்று பதிவேற்றம் செய்யத் தவறுகின்ற காரணத்தினால் இவ்வாறான ஒரு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இதனைச்சரிவர செய்து அலைந்து திரிவதைத் தடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply