வருகைதரு விசா நடைமுறையில் கடுமை – Sri Lankan Tamil News

வருகைதரு விசா நடைமுறையில் கடுமை

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கைக்கான வருகைதரு வீசா நடைமுறையின் போது சிங்கப்பூரைப்போல இலங்கையிலும் பாதுகாப்பு முனைப்புக்கள் கடுமையாக்கப்படவிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 46 நாடுகளைச்சேர்ந்த வெளிநாட்டவர்கள் வருகைதரு வீசா மூலம் வந்து செல்லமுடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவும் இந்த நாடுகளில் அடங்குகிறது. இதன் மூலம் சீனாவில் இருந்து அதிகபடியான பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது சீனாவின் சுற்றுலா மற்றும் ஊடகவியலாளர்கள் குழு ஒன்று கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ரஷ்யா மற்றும் ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் வருகை தரு வீசாவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதுபோலவே சீனாவும் உள்ளடக்கப்படும் என்ற தகவலையே அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதமளவில் சீனாவை இந்த பட்டியலில் உள்ளடக்க நடவடிக்கை எடுத்தபோதும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் காரணமாக பிற்போடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply