மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர்..? காரணம் மகிந்தவின் பிரதமர் பதவி – Sri Lankan Tamil News

மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர்..? காரணம் மகிந்தவின் பிரதமர் பதவி

இந்த செய்தியைப் பகிர்க

மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கியமை உட்பட பல அர்ப்பணிப்புகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்துள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சந்தர்ப்பத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவுக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. அத்துடன் மேலும் முன்னோக்கிச் சென்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், கூட்டணியை உருவாக்குவதற்காக பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போதுமான அளவு அர்ப்பணிப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காட்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply