எதிர்மறையான விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான்! செய்திருக்க வேண்டியதை கூறும் பிரபலம் – Sri Lankan Tamil News

எதிர்மறையான விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான்! செய்திருக்க வேண்டியதை கூறும் பிரபலம்

இந்த செய்தியைப் பகிர்க

பாரி மன்னன் மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான் என நடிகரும், கவிஞரும், அரசியல் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலன் என கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கேள்வி – ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?

பதில் – அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை, தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான்.

ஆனால், பறம்பு மக்களை காப்பாற்றி அவர்களை வாழ வைக்க வேண்டியது தான் அவனது கடமை.

அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ, சேரனுடனோ, பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

அதை அவன் செய்யவில்லை. பாரி மன்னன் மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன் மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான்.

ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும், லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply