நெஞ்சின் மேல் கற்பூரத்தை வைத்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா? வாய் பிளக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்… – Sri Lankan Tamil News

நெஞ்சின் மேல் கற்பூரத்தை வைத்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா? வாய் பிளக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்…

இந்த செய்தியைப் பகிர்க

கற்பூரத்தை நாம் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.கற்பூரத்தில் நன்மை வாசனையே சுவாசத்திற்கு நல்லது. சிலருக்கு கற்பூரம் நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம்.

அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிற்றில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம். இரவு முழுவதும் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால் அதிகளவான நன்மைகள் உண்டாகின்றது எனக் கூறப்படுகின்றது.இவ்வாறு செய்தால் இவ்வளவு நன்மைகளா..?

இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது. இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.மேலும், இது செரிமானம் சீராகுவதற்கும் உதவுகிறது.

கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.சளி மட்டுமின்றி சுவாசகோளாறுகளுக்கு நல்ல தீர்வையும் இது அளிக்கும்.இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.

கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கின்றது.

Advertisement

Recommended For You

About the Author: sudarseithy

Leave a Reply