கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! – Sri Lankan Tamil News

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

இந்த செய்தியைப் பகிர்க

கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். மேலும் கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை தீர்ப்பதோடு, செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். மேலும் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறிவிடும். சளித்தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பு ன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சளி முறிந்து வெளியேறிவிடும்.

Advertisement

Recommended For You

About the Author: sudarseithy

Leave a Reply