நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 5ம் நாள் உற்சவம் மாலை (2019-08-10) – Sri Lankan Tamil News

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 5ம் நாள் உற்சவம் மாலை (2019-08-10)

இந்த செய்தியைப் பகிர்க

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 5ம் நாள் உற்சவம் மாலை
இன்று நல்லுர் கந்தனின் ஐந்தாம் நாள் உற்சவம். ஶ்ரீ கந்தவேள் பெருமான் வள்ளி தேவசேனாதிபதியாக அன்ன வாகனத்திலும் வலம் வரும் நாள். அன்னம் என்ற பறவை பற்றி மக்கள் அனைவரும் அறிந்த விடையம் தண்ணீரையும் பாலையும் கலந்துவைத்தால் கூட தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள கூடிய பறவை அன்ன பறவையை புராண காலத்தில் பரமஹம்சம் (உயரிய குணம் கொண்ட பறவை )ன்என்றும் அழைத்து வந்தார்கள் உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் இவ் அன்ன பறவை பற்றிய நிறைய குறிப்புக்கள் உண்டு. இப் பறவை ஆனது இக்காலத்தில் அருகி இருப்பினும் சில ஐரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன விஞ்ஞான ரீதியாக (Swan) என்று “அனாடிடே” குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாக பெயரிடப்பட்டுள்ளது.
“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி” (கலித்தொகை 69)
இவ்வாறு வேத ஆகமங்கள் போற்றும் இவ் அன்ன வாகனத்தில் வேதாகம் சொரூபனாக பவனிவரும் கந்தவேளின் பாதம் பணிந்து போற்றுவோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply