யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – குழந்தைகள் உட்பட பலரின் நிலை….. – Sri Lankan Tamil News

யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – குழந்தைகள் உட்பட பலரின் நிலை…..

இந்த செய்தியைப் பகிர்க

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொண்ட குழுவினர் விபத்துக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வான்ன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு அருகில் கிரிகெட்டிய பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வானில் பயணித்த 8 பேர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், மத்துகம வேத்தேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய சுற்றுலா சென்ற சிலரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வான் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், மத்துகம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply