எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம்… – Sri Lankan Tamil News

எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம்…

இந்த செய்தியைப் பகிர்க

இம்மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளிவரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 20ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஏதேனும் ஒரு நாளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நவம்பர் 10ஆம் நாளில் இருந்து டிசெம்பர் 8ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சிகளின் செயலாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply