மஹிந்தவின் மிகவும் நெருங்கிய தமிழ் செயற்பாட்டாளர் விபத்தில் பலி – Sri Lankan Tamil News

மஹிந்தவின் மிகவும் நெருங்கிய தமிழ் செயற்பாட்டாளர் விபத்தில் பலி

இந்த செய்தியைப் பகிர்க

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பொதுஜன பெரமுனவினதும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி செயற்பாட்டாளரான தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தீபன் செலுத்திச் சென்ற கார் பேருந்து ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply