சஜித்தை தமிழ் மக்கள் நம்புகின்றனர்! நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி வெளிப்படுத்திய தகவல் – Sri Lankan Tamil News

சஜித்தை தமிழ் மக்கள் நம்புகின்றனர்! நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி வெளிப்படுத்திய தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால் பல கலாசாரங்களை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால் நாட்டில் இருக்கும் பிரதான நான்கு மதங்களின் கலாசார அமைப்புக்களுக்கும் மத்திய சலாசார நிதியத்தின் நிதி பகிரப்படவேண்டும்.

கடந்த காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை காணக்கூடியதாக இருக்கவில்லை. அத்துடன் பல கலாசாரங்களை பின்பற்றும் எமது நாட்டில் ஒருசாரால் மற்றுமொரு இனத்தவரின் கலாசாரம் அவமதிக்கப்படும் பட்சத்தில்தான் இன, மத பிரச்சினைகள் இன நல்லிணக்கத்துக்கான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான நிலைமைகளை கடந்த காலங்களில் எமது நாட்டில் நாங்கள் கண்டிருக்கின்றோம். அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply