“அரச மாளிகை” சென்று பார்க்கலாம் வாருங்கள்… – Sri Lankan Tamil News

“அரச மாளிகை” சென்று பார்க்கலாம் வாருங்கள்…

இந்த செய்தியைப் பகிர்க

பொலன்னறுவையில் அமையப்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்கவொன்றாக, அரச மாளிகை (Royal Palace) விளங்குகின்றது. இது பொலன்னறுவையை ஆட்சி செய்த பராக்கிரமபாகு (1153 – 1186) மன்னனால் கட்டப்பட்டதாகும்.

இங்குள்ள “வைஜயந்தா பிரசாதய” என்னும் 7 மாடிகளை கொண்ட மாளிகையே இங்குள்ள பெரிய கட்டடமாகும். இம்மாளிகையானது தற்பொழுது இடிபாடுகளுடன் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதினால், 3 அடுக்கு மாடிகளை மட்டுமே கொண்டமைந்துள்ளது. குறித்த மாளிகையானது 7 ஆண்டுகளில் 7 மாதங்களில் கட்​டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரலாற்று சான்றுகளின் படி, குறித்த மாளிகையானது 1000 அறைகளை கொண்டு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று 55 அறைகளை மட்டுமே காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் குறித்த மாளிகையானது முழுவதுமாக செங்கற்கற்களால் கட்டப்பட்டுள்ளமையையும் காணமுடியும்.

இதன் சிறப்புகளில் ஒன்றாக, குறித்த மாளிகையானது மத்திய பகுதியில் அரசனுக்கென பிரத்தியேக அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 100 அடி நீளமும் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடத்தினை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இலங்கைச் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply