மட்டக்களப்பு உங்களுக்கு ஊர் எங்களுக்கு உயிர் – Sri Lankan Tamil News

மட்டக்களப்பு உங்களுக்கு ஊர் எங்களுக்கு உயிர்

இந்த செய்தியைப் பகிர்க

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பென்பது தனியான கலாச்சாரத்தையும், மொழியையும், பண்பாட்டையும் கொண்ட இலங்கையின் மிக அழகிய நகரங்களில் ஒன்று.

அங்கு ஏராளரான வழங்கள்நிறைந்த மண் ,விருந்தோம்பலுக்கு பெயர்போன மட்டக்களப்பு வந்தார் யாரையும் வெறுங்கையோடு திருப்பியனுப்பியதாக சரித்திரம் இல்லை, இதுதான் இந்த மண்ணுக்கே உரிய மகத்துவம்,

எங்கு மண்ணை கிண்டி எதை போட்டாலும் மரமாய் முழைக்கும் மண்வழம், அழகிய ஆறு, குளங்கள், சுற்றி வர கடல் என பார்பதர்க்கே அழகான „செஞ்செழிப்பான மண், படுவானும் அழகு எழுவானும் அழகு, இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் ஈரலிப்பாகவே இருந்த மண் இன்று பருவமழையின்தாக்கத்தால் காய்ந்துகொண்டிருக்கிறது,

இதற்கு காரணம் படித்தவர்கள் என தம்மை சொல்லிக்கொள்ளும் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் என்றால் எவரும் மறுக்கமுடியாது.

1990 களுக்கு முன் ஒற்றையடிப்பாதைகளில்தான் கிராமங்களில் திரிவோம், மாரிகாலம் தாண்டி மே, யூன் வரை நிலத்தில் ஈரலிப்பிருக்கும், ஆங்காங்கே, ஊற்றுகண்களில் நீர் வடிந்துகொண்டிருக்கும், குளங்கள் வற்றியிருக்காது, மூன்றுபோக விவசயாம் நடந்துகொண்டிருக்கும், காட்டு மிருகங்கள் ஊருக்குள் வருவதில்லை, இப்போதிருப்பது போல வெயிலும் இல்லை,

ஆனால் இன்று பருவமழை பொய்த்துவிட்டது?யாரால் ?

சமூகவலைத்தளத்தில் இதையெல்லாம் சொல்லும் சமூகவிரோதியாலா? அல்லது மண்ணையும் காட்டையும் சட்டப்படி விற்கிறேன் என்று கூறு போட்டு விற்றக அனுமதி கொடுத்த அரச அதிகாரிகளாலா ?

எங்கள் ஊரில் சட்டப்படி மணல் அகழ்வு நடக்கிறது, அனுமதி கொடுத்தது புவிசரிதவியல் திணைக்களம், இதை தடுக்க பிரதேச செயலாளராளும், அரச அதிபராலும் முடியும் ஆறுகள் மூடப்பட்டுள்ளது, காடுகள் ரகசியமாக அழிக்கப்படுகிறது, ஒட்டுமொத்தமாக சூறையாடுகிறார்கள் சிறிதாவது இடைவெளி கொடுங்கள் என்றால், சமூக விரோதியாம் ஆனால் தடுக்கமாட்டார்கள் …..

மட்டக்களப்பின் படுவான்கரை விவசாயத்தை , கால்நடை வளர்ப்பை பாரிய அளவில் செய்து அதனால் பலபேருக்கு தொழில் வழங்கி இருந்தது. நாம் வாழ்ந்த இயற்கை நாம் நேசிக்கும் மண், மெல்ல மெல்ல அழிக்கப்படுகிறது, பொறுக்கமுடியவில்லை…..

2007-2008 கிழக்கில் யுத்தம், அரச வழங்கள் பெரும்பாலும் அங்குள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை ,அப்போது கூட அரசு வீட்டுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் முழுமையாக அவை வழங்கப்படவில்லை,பல ஆயிரம் கோடிகள் ஊழல் .

2008 -2019 வரை கிழக்கு மீட்ப்புக்கு பின் ஏராளமான நிதி அரசாலும், பிற. நாட்டு தனியார் நிருவனங்களாலும் ஒதுக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தின் ஊடாகவும், பிரதேச செயலகங்களின் ஊடாகவும் ,அரசியல் வாதிகள் ஊடாகவும் இவை நடைமுறைபடுத்தப்பட்டது.

ஆனால் மக்களுக்கு சென்றடைந்ததை விட அரசியல் வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பயன்பட்டது தான் அதிகம், படுவான்கரை சென்றுவாருங்கள் புரியும் எங்கே மீள்குடியேற்றம் நடைபெற்றது, என்ன அபிவிருத்தி நடந்ததென்று தெரியும்.

சமூர்த்தி, என்ற பெயரில் ஊழல் சடலத்தை வைத்து ஊழல் கள்ள உறுதி முடித்து கொடுப்பது, ஏழைகள் என்றதும் அலய விடுவது,பிறப்பு இறப்பு சான்றிதல் என்றாலும் தெரிந்தவரடு வரவேண்டும் இல்லாட்டி போய் புதன் கிழமை வா, இதுவா அரச அதிகாரிகளின் கடமை ?

எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறது ஒரு கூட்டம், மண்ணை பற்றி தெரியுமா, மக்களை பற்றி தெரியுமா? .எங்கோ படித்து எங்கோ பிறந்து எங்கோ வளரந்துவிட்டு இங்கு வந்து அரசியல் கற்றுத்தர பார்க்கிறது ஒரு கூட்டம் . மண்ணை நேசிப்பவனிடம் வைத்துக்கொள்ளாதீர்கள், மகத்தான பல வரலாறுகளை உருவாக்கிய பெருமை நம் மண்ணுக்குண்டு என்பதை மறவாதீர்கள்.

-காவலன்-

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply