யாழில் பலமுறை சாக முயன்றவரிற்கு இன்று எமனான புகையிரதம் – படங்கள் – Sri Lankan Tamil News

யாழில் பலமுறை சாக முயன்றவரிற்கு இன்று எமனான புகையிரதம் – படங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

யாழ் சாவகச்சேரி நகரத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து, இன்று காலை 7.10 மணியளவில் ஆண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவர் அண்மைக்காலமாக பலமுறை புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றபோதும், அந்த பகுதியில் நிற்கும் பொதுமக்களால் விரட்டி விடப்பட்டுள்ளதாக அந்த பகுதி வாசிகள் குறிப்பிட்டனர்.

தற்போது, அவரது உடல் புகையிரதத்தில் கொடிகாமம் புகையிரத நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அங்கிருந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சடலம் ஒப்படைக்கப்படும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply