பாசத்துக்குரிய மாமியார் இறந்ததால் மருமகள்களின் நெகிழ்ச்சியான செயல் – Sri Lankan Tamil News

பாசத்துக்குரிய மாமியார் இறந்ததால் மருமகள்களின் நெகிழ்ச்சியான செயல்

இந்த செய்தியைப் பகிர்க

இறந்த மாமியார் உடலை, நான்கு மருமகள்கள் இணைந்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில், சுந்தர்பாய் நெய்க்வடே என்ற பெண் தனது 83 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது கண்களை தானமாக அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்பேயின் கணவர் இறந்த போது, அவரது கண்களையும் தானம், செய்துள்ளனர்.

சுந்தர்பாய் நெய்க்வடே ,உயிருடன் வாழும்போது, தனது 4 மகன்கள்,4 மருமகள்கள், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் மீது அளவில்லாத பாசம் கொண்டவராக இருந்துள்ளார். எனவே, நேற்று தனது இறுதிநாளை முடித்து கண்ணை மூடினார். இன்று அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது, 4 மருமகள்களும் கண்ணீருடன் பாசம் தழுதழுக்க.. மயானத்திற்குப் பாதி தூரம் மாமியாரின் உடலைச் சுமந்துகொண்டு சென்றனர். அதன்பின்னர் ஆண்கள் அவர்களிடமிருந்து சுந்தர்பாய் நெய்க்வடேயின் உடலை வாங்கி, மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.

மாமியாரின் இறந்த உடலை 4 மருமகள்களும் சேர்ந்து தங்கள் தோளில் வைத்துத் தூக்கிச் சென்ற சம்பவம் எல்லோருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply