யாழில் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு: சரமாரியாக தாக்கிய பெண் வீட்டார்; நடந்தது என்ன? – Sri Lankan Tamil News

யாழில் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு: சரமாரியாக தாக்கிய பெண் வீட்டார்; நடந்தது என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும்போதே திருமணம் வேண்டாம் என மணமகன் திருமணத்தை இடைநிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அண்மையில் யாழில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவருக்கும் கிளிநொச்சி கல்மடுவை சேர்ந்த 32 வயது ஆண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண தரகர் மூலம் திருமணம் பேசி சம்மந்த கலப்பும் இடம்பெற்று குறித்த பெண்ணும், ஆணும் சில மாதங்கள் ஒருவருடன் ஒருவர் பேசியும், பழகியும் வந்தனர்.

இந்நிலையில் இந்த (09) மாதம் 5 திகதி யாழில் திருமணம் இடம்பெறவிருந்தது, அதற்காக அழைப்பிதழ்களும் கொடுக்கப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றுக்கும் முற்பணம் கொடுத்து வாடகைக்கு அமர்த்தியும் மற்றும் பல திருமண வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என மாப்பிளை திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பெண் வீட்டு உறவினர்கள் மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாப்பிள்ளையையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் திருமணம் இடம்பெறவிருந்த வீட்டில் களேபரம் இடம்பெற்றுள்ளதாக சோகத்தில் தெரிவிக்கின்றனர் பெண்ணின் உறவினர்கள்.

இதுவரை மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் உறுதியாக வெளியாகாத நிலையில், மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெண் அழகில்லை என விமர்சித்து வந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இதன் காரணமாகத்தான் குறித்த ஆண் இந்த திருமணத்தை இடைநிறுத்தியிருக்கலாம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அழகு நிரந்தரமில்லை, பெண்ணின் நல்ல பண்புகளே இல்லறத்தை நல்லறமாக இறுதிவரை கொண்டு செல்லும் என்பதை குறித்த ஆண் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார் என பலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply