அரச ஊழியர்களுக்கு இந்தநோய் தாக்கினால் வழங்கப்பட்டது சம்பளத்துடன் கூடிய விடுமுறை! – Sri Lankan Tamil News

அரச ஊழியர்களுக்கு இந்தநோய் தாக்கினால் வழங்கப்பட்டது சம்பளத்துடன் கூடிய விடுமுறை!

இந்த செய்தியைப் பகிர்க

அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டால்,அவர்களது சிகிச்சைக்கென ஒன்பது மாதத்திற்கு மேற்படாத வகையில் சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறையை வழங்குவதற்கு ஏற்ற வகையில் தாபனக் கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்குரிய அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பொது நிர்வாக அமைச்சு 23/2019 ஆம் இலக்க சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, புற்று நோய்க்காக 6 மாதங்களுக்கு மேற்படாத வகையில் முழுச் சம்பளத்துடன் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் விசேட லீவு வழங்கப்படும்.

மேலும் லீவு தேவைப்படுமாயின், வைத்திய சபையின் பரிந்துரையின் பேரில் மேலும் 3 மாதங்களுக்கு மேலதிக விடுமுறையை சம்பளத்துடன் வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதற்கு முன்னர் ஆறு மாதங்கள் மாத்திரமே விசேட லீவு வழங்கப்பட்டது. விசேட லீவு தாபனக் கோவையில் காச நோய், தொழு நோய் என்பவற்றுக்கும் லீவு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply