முடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள் – Sri Lankan Tamil News

முடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

வவுனியாவில் 14வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை : பெற்றோர் கதறல்

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை காணவில்லையே மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்றினை மேற்கொண்டுள்ளார்.

பூந்தோட்டம் காந்திநகர் பகுதியிலிருந்து மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அப்பம்மா வீட்டுற்கு செல்வதாக தெரிவித்து கடந்த 07.09.2019 அன்று மதியம் துவிச்சக்கரவண்டியில் குறித்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இரவு நேரமாகியும் சிறுவன் அப்பம்மா வீட்டிற்கு செல்லவில்லை இதனையடுத்து அயவலர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பெற்றோர்கள் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை

அதன் பின்னர் நேற்று முன்தினம் (10.09.2019) மகனை காணவில்லையேன வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடோன்றினை மேற்கொண்டுள்ளார்.

வீட்டை விட்டு குறித்த சிறுவன் வெளியேறிய சமயத்தில் நாவற் கலர் சேட் மற்றும் கறுப்பு ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் அவரை பற்றி தகவல் எதேனும் அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

077 – 4982220 ஜெனுசன் (சகோதரன்)
076 – 6530123 சன்ஜீத் (உறவினர்)
076 – 0158241 ஜெயராசா (தந்தை)

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply