புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவி – இதுவே ரணிலின் பலம், கோத்தா – Sri Lankan Tamil News

புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவி – இதுவே ரணிலின் பலம், கோத்தா

இந்த செய்தியைப் பகிர்க

மக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்துள்ளது, தூதரகங்களின் உதவியுடனும், புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவியுடனும் தன்னை பிரதமராக நியமிக்க ரணில் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுவே ரணிலின் பலம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து வடக்கு கிழக்கினை இணைக்க தமிழ் தரப்பு சந்தர்ப்பம் பார்த்து காத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொரட்டுவ பிரதேசத்தில் எளிய அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கைச் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply