எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை.! நிச்சியம் நான் களமிறங்குவேன்… முக்கியஸ்தர் அதிரடி – Sri Lankan Tamil News

எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை.! நிச்சியம் நான் களமிறங்குவேன்… முக்கியஸ்தர் அதிரடி

இந்த செய்தியைப் பகிர்க

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு கிடைக்கும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியினதும் சிவில் அமைப்புகளினதும் முழுமையான ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது, வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராயும் வகையில் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினர்களும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கூடி கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் 5.30 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்தே கலந்துரையாடப்பட்டிருந்தது, சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply