திருமண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பத்துக்கு நடந்த பெரும் சோகம்! தூக்கி வீசப்பட்ட சிறுவன்! – Sri Lankan Tamil News

திருமண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பத்துக்கு நடந்த பெரும் சோகம்! தூக்கி வீசப்பட்ட சிறுவன்!

இந்த செய்தியைப் பகிர்க

கண்டி மாநகர சபைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து பயணித்த வானொன்று, ரேஸிங் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வானில் உறக்கத்திலிருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியை அண்மித்து வசிக்கும் அன்சார் அன்சாப் (வயது – 6 ) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற உறவினரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஏறாவூர் நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் வானில் பயணம் செய்த மற்றைய எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண் டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply