பெண்கள் வாகனத்தை மோதித் தள்ளியது இராணுவம்! பயணித்தவர்களின் நிலை…? – Sri Lankan Tamil News

பெண்கள் வாகனத்தை மோதித் தள்ளியது இராணுவம்! பயணித்தவர்களின் நிலை…?

இந்த செய்தியைப் பகிர்க

பெண்கள் பயணித்துக் கொண்டிருந்த வானை பின்னால் வந்த இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரியவருகிறது.

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் பயணித்த வானே விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் பெண்களே. இவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இராணுவ சாரதியை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply