தவறை ஒப்புக்கொண்ட அமைச்சர் கிரியெல்ல – Sri Lankan Tamil News

தவறை ஒப்புக்கொண்ட அமைச்சர் கிரியெல்ல

இந்த செய்தியைப் பகிர்க

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது தவறு என்றால் அதனை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டத்திற்கு முரணாக ஆட்களை பணியில் சேர்த்துக்கொண்டதாக அமைச்சர் கிரியெல்லவுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமான விசாரணையில் அமைச்சர் ஆஜராகி சாட்சியளித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு எதிராக முறைப்பாடுகள் இல்லை. முறைப்பாடு செய்த நபர், கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வேலை வாய்ப்பை வழங்கியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது குற்றம் என்றால், நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply